×

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். நாகர்கோவில் கோர்ட்டில் குற்றவியல் உதவி இயக்குநராக உள்ளார். அவரது மனைவி கண்மணி (52). நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் போலீசார் கடந்த பிப்ரவரி 12ம் தேதி இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது தோழி அமுதா ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் இருந்து ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமும், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையில் ரூ.91 லட்சத்துக்கான ஆவணம் மற்றும் 91 பவுன் தங்க நகைகள், சில சொத்து பத்திரங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தோழி அமுதா வீட்டில் ரூ.23 லட்சத்துக்கான கடன் பத்திரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதிலிருந்து இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீதம் வரை சொத்து சேர்த்துள்ளது தெரியவரவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப்பதிந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு தற்போது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது. விடுமுறையில் இருந்த இன்ஸ்பெக்டர் கண்மணி பின்னர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்….

The post லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Xavier Pandian ,Ramanputur ,Nagercoil, Kanyakumari district ,Nagercoil Court ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது